இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழாசிரியர் கருத்து
திருப்பூர், டிச. 13 – திருப்பூரின் பழம்பெயர் திருப்பையூர் என இருந்திருக்க லாம் என திருப்பூர் செல்லம்மாள் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் வே.சுந்தர கணேசன் கூறியுள் ளார். இது குறித்து அவர் தெரிவித் துள்ளதாவது: திருப்பூரின் பழைய பெயர் குறித்து பல்வேறு கருத்து கள் நிலவுகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் அடிப்படையில் திருப்பூரின் பெயர் திருப்பையூர் என இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன. அவற்றில் 96 வகையான சிற்றி லக்கிய வகைகளே 12ஆம் நூற் றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவற்றுள் ஒன்று குற வஞ்சி வகை இலக்கியமாகும். அத்தகைய இலக்கியம்தான் அலகுமலைக் குறவஞ்சி. இதனை பொங்கலூர் நாட்டின் தலைநக ராக இருந்த கொடுவாய் எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகன் சின்னத்தம்பி நாவலர் இயற்றியுள்ளார். இந் நூலை இயற்றிய காலம் கி.பி. 1753. அதாவது இன்றைக்கு 267 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பழனிசாமி புலவர் என்பவர் 1963 ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் இருந்து அச்சு நூலாக பதிப்பித்தி ருக்கிறார். இந்நூலில் பொங்கலூர் நாட் டில் உள்ள ஊர்களாக, “பொங்கலூர் கொடுவாய்
புத்தரசை உபாயனூர்
பொன்குன்றை செம்மாபுரம் புகழ் பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற் புவிபெரும் பிள்ளை நகரும்…” என்று வருகிறது. மேலும் இங்குள்ள சிவால யங்களைக் குறிக்கும்போது, “தென்பெருந்தலையில் பாண்டிலிங்கேசர் திருப்பையூர் விஸ்நாதம யேசர்..” என்றும் வருகிறது அத்துடன் குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில், “கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும் பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா!” என கணையாழி பெற்றதையும், “செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து திருப்பையூர் வாழ் கொங்க வணிகன் விஸ்வமால் குருசாமி தந்தை வரிசைதான் சிங்கா” என்று குறத்தி கூறுவதாகவும் வருகிறது. பொங்கலூர் நாட்டில் ஊர்த்த லைவர்களைக் குறிப்பிடும் போது, அவர்களில் பெரும்பாலா னோர் வேளாளர்களாகவே உள் ளனர். ஆனால் திருப்பையூரில் மட்டும், வாணிகம் செய்யும் செட் டிமாரே ஊர்த்தலைவராக இருந் துள்ளனர் என்பதாக “திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச் செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்” என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் தற்போது திருப் பூர் என்றழைக்கப்படும் ஊர் 270 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பை யூர் என்று அழைக்கப்பட்டிருக்க லாம், வணிகர்கள் தலைவர்க ளாக இருந்துள்ளனர் என புலவர் வே.சுந்தரகணேசன் கூறுகிறார். இது தொடர்பாக தொல்லி யல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர் களிடம் கேட்டபொழுது, “சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்ப டுகிறது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்ததாகவும் புல வர் சுந்தரகணேசன் கூறியுள் ளார்.