தருமபுரி, டிச.27- தருமபுரி மற்றும் சேலத் தில் பதுக்கி வைத்திருந்த 1758 மதுப் பாட்டில்களை போலீசார் வியாழனன்று பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி விடி வெள்ளி நகரைச் சேர்ந் தவா் விஜயகுமார் (27). இவரது வீட்டில் மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவ தாக புகார் எழுந்தது. இதை யடுத்து, உதவி காவல் ஆய் வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, விஜயகுமார் வீட்டில் மதுப் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 800 மதுப் பாட்டில்களை போலீசார் பறி முதல் செய்து, தலைமறைவாகியுள்ள விஜய குமாரை தேடி வருகின்றனா். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப் பதிந் துள்ளனா்.
சேலம்
இதேபோல் எடப்பாடி அருகே கொங் கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்டது கோண சமுத்திரம் கிராமம். இங்குள்ள சடையம் பாளைம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொங்கணாபுரம் சடையம் பாளைம் பகுதியில் போலீசார் மேற் கொண்ட சோதனையில் அப்பகுதியைச் சோ்ந்த பழனிமலை மகன் அய்யாசாமி என்ப வரது வீட்டில், சட்ட விரோதமாக 958 மதுபாட்டில்கள் பெட்டிகளில் அடைக் கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்ட றிந்தனா். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான அய்யாசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.