tamilnadu

பாஜகவிலிருந்து விலகியவரை கொல்ல முயற்சி

பத்தனம்திட்டா, ஜுன் 28- சக ஊழியரை கொலை செய்ய முயன்ற பாஜக தலைவரையும் அவரது கூட்டாளி களையும் காவல்துறையினர் தேடி வரு கின்றனர். பந்தளம் பகுதியில் உள்ள இலவும்திட்டா வைச் சேர்ந்தவர் விஷ்ணு (24). இவர் பாஜக, ஆர்எஸ்எஸ் ஊழியராக செயல்பட்டு வந்தார். அந்த இயக்கங்களின் செயல்பாடு களில் அதிருப்தி அடைந்த அவர் அவற்று டன் இருந்த தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த இயக்கத்தினர் வியாழனன்று இரவு அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். யுவமோர்ச்சா புனலூர் மண்டல செயலாள ரான பிரணவ் (28) மற்றும் அவரது கூட்டாளி கள் மீது விஷ்ணு புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.  கடந்த 5 ஆண்டுகளில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் பிரணவ். கலைஞரான அஜீசின் கைகளை வெட்டி துண்டித்ததுடன் கொல்ல முயன் றது, காங்கிரஸ் கட்சி ஊழியரான மனு வின் கையை வெட்டியது, சிபிஎம் வட்டா ரக்குழு உறுப்பினர் அஜியின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தியது என தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டவராவார்.