tamilnadu

பெருவெள்ள உதவி இலவசம் அல்ல; அரிசிக்கு பணம் கேட்கும் மோடி அரசு

திருவனந்தபுரம், ஜன. 7- பெருவெள்ளத்தின்போது கேரளத்திற்கு வழங்கிய 89,540 மெட்ரிக் டன் அரசிக்கு ரூ.205.81 கேட்டு மத்திய உணவு கழகம் (எப்டிஐ) கேட்டுள்ளது. விரைவாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துயர் துடைப்பு நிவாரண ஆணையத்தை எப்சிஐ பொது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து பேரிழப்புகளை சந்தித்த கேரளம் அல்லாத 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கிய பின்னணியில் கேரள அரசை மோடி அரசு பழிவாங்குகிறது. 2019 இல் ஏற்பட்ட பெருவெள்ளம் மோசமான விளைவுகளை கேரளத்தில் ஏற்படுத்தியது. இதற்கான நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.2101 கோடியை கேரள அரசு கேட்டது.  உதவி கேட்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கடிதம் அளிக்கப்பட்டது.  அதே நேரம் 7 மாநிலங்களுக்கு ரூ.5908 கோடி உதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு இதற்கான முடிவை மேற்கொண்டது.   2108 இல் கேரளத்தை பெருவெள்ளம் சூழந்தபோதும் போதுமான உதவியை வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. பிரதமர் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பினர் என்றாலும் துயர் துடைக்க உதவிகள் எதையும் வழங்க முன்வரவில்லை.

;