tamilnadu

img

‘ரீசைக்கிள் கேரளா’ இயக்கத்திற்கு இங்கிலாந்தின் மார்னிங் ஸ்டார் நாளிதழ் பாராட்டு

திருவனந்தபுரம், ஆக.24- கேரளம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ரீபில்டு கேரளா இயக்கத்தை இங்கிலாந்து நாட்டின் மார்னிங் ஸ்டார் நாளிதழ் பாராட்டியுள்ளது. கேரளத்தின் இளம் கம்யூ னிஸ்ட்டுகள் மாறுபட்ட பிரச்சா ரத்தின் மூலம் 12 லட்சம் பவுண்டு கள் சேகரிப்பு என்கிற தலைப்பில் மார்னிங் ஸ்டார் நாளிதழில் வெளி யான கட்டுரை ரீசைக்கிள் கேரளா  குறித்து விரிவாக அலசுகிறது. செய்தித்தாள்களும், பாட்டில்க ளும் சேகரித்து பணம் சேகரித்து நிவாரண நிதிக்கு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் வழங்கிய நன்கொடையை முன்மாதிரி செயல்பாடு என அந்த நாளிதழ் மதிப்பீடு செய்துள்ளது. இதற் காக கால்பந்து வீரர் சி.கே.வினீத் தனது உடையை ஏலம் விட்டதை யும் கட்டுரை புகழ்ந்துள்ளது. மார்னிங் ஸ்டார் கட்டுரை இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி யின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலும் டுவீட் செய்யப்பட் டுள்ளது. சமூக நல ஓய்வூதியம், வீடற்றவர்களுக்கு வீடு, ஹரித கேரளம் திட்டம் போன்றவையும் கட்டுரையில் எடுத்துக் கூறப்பட்டுள் ளது. கோவிட ஊரடங்கு காலத் தில் மாணவர்களுக்கு வீடுகளில் உணவு ஒப்படைப்பது உள்ளிட்ட கோவிட் காலத்தில் கேரள அர சின் நடவடிக்கைகளையும் இங் கிலாந்து நாளிதழ் பாராட்டி யுள்ளது.