tamilnadu

img

52 லட்சம் பேருக்கு ஓய்வூதியமாக ரூ.20,000 கோடி

3 ஆண்டுகளில் வழங்கியதாக கேரள முதல்வர் பேச்சு

மஞ்சேஸ்வரம், அக்.12- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.600லிருந்து ரூ1200ஆக உயர்த்தியதோடு மூன்று ஆண்டு களில் ரூ.20,000 கோடியை சமூக நல ஓய்வூ தியமாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு வழங்கியுள்ளது என அம்மாநில முதல் வர் பினராயி விஜயன் கூறினார். கேரளத்தில் நடைபெறவிருக்கும் 5 சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பகு தியாக மஞ்சேஸ்வரம் தொகுதி எல்டிஎப் வேட்பாளர் எம்.சங்கர் ராயை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:  சரியான திட்டமிடல் மூலம் வேளாண் துறையை உயர்த்தும் நடவடிக்கையை எல்டிஎப் அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த யுடிஎப் அரசு வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட்ட பணம் 61 சதவிகிதம். எல்டிஎப் அரசு 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பணம் அதற்காக செலவிட்டுள்ளது. இதுதான் இரு அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடு. நாட்டின் முன்னேற்றத்துக்கு வடிவம் கொடுத்தால் மட்டும் போதாது. அதை அமல் படுத்த வேண்டும். அமல்படுத்த நாட்டின்மீது அர்ப்பணிப்பு வேண்டும். அப்போதுதான் அத்தகைய செயல்கள் முழு வடிவம் பெறும். லாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களை யுடிஎப் ஆட்சி நட்டத்தில் தள்ளியது. நட்டக்கணக்கு ரூ.131 கோடி. ஆனால், எல்டிஎப் அரசு ரூ.258 கோடி லாபத்துக்கு கொண்டு வந்துள்ளது.   

1,20,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

எல்டிஎப் அரசு 1,20,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை அளித்துள்ளது. யுடிஎப் ஆட்சி காலத்தில் நியமனத்துக்கு தடை விதிக் கப்பட்டிருந்தது. சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்கள் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர். யுடிஎப் அவர் களுக்கு கொடுக்காமல் பாக்கி வைத்தி ருந்த தொதை ரூ.1800 கோடியாகும். எல்டிஎப் முதலில் செய்தது அந்த தொகையை கொடுத்து பாக்கியை கழித்தது. ரூ.600லிருந்து மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ1200ஆக உயர்த்தி இரட்டிப்பாக்கியிருக்கிறது. யுடிஎப் தனது 5 ஆண்டு கால ஆட்சியில் இதற்காக கொடுத்த தொகை ரூ.8,888 கோடி. எல்டிஎப் 3 ஆண்டுகளில் மட்டுமே ரூ.20,000 கோடியை வழங்கியுள்ளது. புதிதாக 10 லட்சம் பேர் உட்பட இப்போது 52 லட்சம் பேர் இந்த ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். மக்களை பார்த்துக்கொண்டே இருக்கும் அரசு இது. அதனால்தான் இந்த மாற்றங் கள்.  

கல்வி, சுகாதாரத்தில் முதலிடம்

கல்வியிலும் சுகாதாரத்திலும் கேரளம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக்கின் அறிவிப்பே கூறுகிறது. நமது மருத்துவக் கல்லூரிகள் பெருமளவில் முன்னேறி வரு கின்றன. தாலுகா மருத்துவமனைகளும் வளர்ந்து வருகின்றன. இடமண்- கொச்சி பவர் ஹைவே திட்டத்தை அமல்படுத்த முடி யாது என பவர்கிட் கைகழுவியது. எல்டிஎப் அவர்களை திரும்ப அழைத்து பணிகளை முடித்துள்ளது. அதன்மூலம் 3,700 மெகா வாட் மின்சாரம் எளிதாக கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் அரசியல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் வேட்பாளர் மீதான தனிநபர் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று முதல்வர் குறிப் பிட்டார்.