tamilnadu

img

தங்கம் வென்ற சீரியல் நடிகை

சர்வதேச குத்துச்சண்டை

ஐக்கிய அரபு அமீ ரகத்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரின்  மகளிர் 48 எடை பிரிவில், இந்தியா சார்பில் களமிறங்கிய ஐரா அகர்வால் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது சகஜமான விஷயம் தான் என்றாலும், ஐரா அகர்வால் ஒரு சீரியல் நடிகை மூலம் நாட்டிற்குப் பதக்கம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் தான். கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக குத்துச்சண்டையில் பங்கே ற்று வரும் ஐரா அகர்வால் முதல் முறையாகச் சர்வதேச தொட ரில் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறுபடைத்துள்ளார். சீரியல் இல்லாத நேரத்தில் குத்துச்சண்டை மேற்கொண்டு வரும் ஐரா அகர்வால் ராஜாமகள், கடைக்குட்டி சிங்கம் (மீனாட்சி), கண்மணி (வானதி), கங்கா (மஹிமா) போன்ற  முக்கிய சீரியல் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சின்னத் திரையில் சாதித்தது மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் அசத்தும் ஐரா அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.