அம்ரேலி, ஜன.5- குஜராத்தில் மகாத்மா காந்தி சிலையை சில நபர்கள் உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஹரிகிருஷ்ணா ஏரிக்கரையில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலை யை இரவில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். சிலை உடைந்து நொறுங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், சிலையை உடைத்த மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான சவ்ஜிபாய் தோலக்கியாவின் அறக்கட்டளை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஏரி கட்டப்பட்டு இருந்தது. பிரத மர் மோடிதான் இந்த ஏரியை திறந்து வைத்தார்.