இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - இந்தியா
இடம்: லீட்ஸ்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% - 50% வாய்ப்பு
தரமான வீரர்கள் இருந்தும் பொறுப்பில்லாத ஆட்டத்தால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணியிடம் மட்டும் போராடித் தோற்ற இந்திய அணி, மற்ற நாடுகளை புரட்டியெடுத்து (நியூஸிலாந்து நாட்டைத் தவிர) அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான். இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் இலங்கை அணியும், அரையிறுதி ஆட்டத்தில் முதலிட அந்தஸ்துடன் களமிறங்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் லீட்ஸ் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : மான்செஸ்டர்
நேரம் : மாலை 6 மணி
வெற்றி 50% ; 50% வாய்ப்பு
கோப்பை வெல்லும் அணியாக எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி சொதப்பலான ஆட்டத்தால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்திய அணியிடம் மட்டும் மண்ணை கவ்விய ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளிடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. வெற்றியோடு விமான நிலையம் செல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும், முதலிடத்தை இந்தியாவிற்கு வீட்டுக் கொடுக்க தயங்கும் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காகக் கங்கணம் கட்டிவருவதால் மான்செஸ்டர் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.