ஆடவர் பிரிவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெற்று வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரைப் போன்று மகளிர் பிரிவிலும் உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது.இந்த தொடரின் 7-வது சீசன் ஆஸ்திரேலியாவில் வெள்ளியன்று தொடங்குகிறது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்துவது கிடை யாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள் அணிகள் தான் கடந்த 6 சீசன்களிலும் ஆதிக்கம் செலுத்திக் கோப்பை கைப்பற்றி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மல்லுக்கட்ட இந்தியாவைத் தவிர ஆசியக்கண்டத்தில் வேறு எந்த அணிகள் இல்லை என்ப தால், ஹர்மன் ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த முறை கோப்பை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சி யுடன் களமிறங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது.
அணிகள் - 10
இந்தியா
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
இங்கிலாந்து
நியூஸிலாந்து
மே.இ.தீவுகள்
தென் ஆப்பிரிக்கா
இலங்கை
வங்கதேசம்
தாய்லாந்து
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கோப்பையுடன் ரூ.7.16 கோடி 2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3.52 கோடி