தோனி இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர்.இந்திய அணிக்கு பல்வேறு பெருமைகளைத் தேடித்தந்தவர். தோனி இல்லாமல் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெற்று இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ம முடிய வில்லை. ஓய்வுபெறுவதற்குச் சரியான நேரம் எது என்று தோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்று விரும்புகிறாரோ தோனியே முடிவு செய்வார்.அவரது ஓய்வுகுறித்து யாரும் எதுவும் நினைக்க தேவையில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வார்னே அளித்த பேட்டியிலிருந்து...