tamilnadu

img

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

சூதாட்ட பிரச்சனை காரண மாக ஐபிஎல் தொடரில் தமிழக அணியான சென்னை, ராஜஸ் தான் அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்-லில் சென்னை அணி இல்லாததால் சோர்வடைந்தனர். இப்படியே போனால் ரசிகர்கள் ஏங்கி போய்விடுவார்கள் என்று எண்ணிய தமிழக கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) என்ற பெய ரில் டி-20 தொடரை 2016-ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழக வீரர்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்த தொடர் ஐபி எல் தொடரைப் போல ஏல முறையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதுவரை 3 சீசன் நிறைவடைந்த நிலையில், 4-வது சீசன் வெள்ளியன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) - திண்டுக்கல் (டிராகன்ஸ்) அணிகள் மோதுகின்றன.  ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடரில்  சீசெம் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (சென்னை), டூட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி  வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளுக்கும் 45 வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளு டன் தலா ஒரு முறை மோத வேண்டும் (மொத்தம் 32 ஆட்டங்கள்). லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் (புள்ளிகள் அடிப்படையில்) அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

இதுவரை சாம்பியன்கள் 
 

2016 - தூத்துக்குடி (டூட்டி பேட்ரியாட்ஸ்) 
2017 - சென்னை (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) 
2018 - மதுரை (பாந்தர்ஸ்)
 

மைதானங்கள் 

திண்டுக்கல் - நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானம் 
திருநெல்வேலி - சங்கர்நகர் ஐசிஎல் மைதானம்
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானம் 

பரிசுத்தொகை 

கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் வழங்கப்படும்.

போட்டி நேரம் 

  1. ஒரு ஆட்டம் நடைபெறும் நாட்களில் - இரவு 7.15க்கு
  2. இரண்டு ஆட்டம் நடைபெறும் நாட்களில் முதல் ஆட்டம் - மாலை 3.15க்கும், 2-வது ஆட்டம்- இரவு 7.15-க்கும் தொடங்கும்.

தொடக்க ஆட்டம் 

சென்னை - திண்டுக்கல் 
இடம் : திண்டுக்கல் (நத்தம் என்பிஆர்)
நேரம் : இரவு 7.15 மணி