tamilnadu

img

ராணுவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் திசரா பெரேரா பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். டெஸ்ட்,  ஒருநாள், டி-20 என மூன்று ஆட்டத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சிறப்பு திறன் வாய்ந்தவர் என்பதால் தொடர்ந்து அணியில் விளையாடிக் கொண்டிருப்பார்.  இந்நிலையில், திசரா பெரேரா இலங்கை ராணுவத்தின் கஜாபா ரெஜிமன்ட் பிரிவில் மேஜராக பணியில்  சேர்ந்துள்ளார். ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரில் திசரா பெரேரா ராணுவத்தில் சேர்ந்துள்ள தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு முன்னாள் கேப்டன் தினேஷ் சந்திமால், இலங்கை  ராணுவத்தில் சேர்ந்து தற்போது ராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.