tamilnadu

img

இந்தூர் டெஸ்ட் வங்கதேசம் திணறல்

இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மத்தியப் பிர தேச மாநிலத்தின் முக்கிய நகரான  இந்தூரில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டி ங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. தொடக்கம் முதலே திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்க தேச தொடக்க வீரர்கள் இஸ்லாம் (6  - இஷாந்த் சர்மா பந்துவீச்சில்), இம்ருல்  கைய்ஸ் (6 - உமேஷ் பந்துவீச்சில்) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.  அடுத்து களமிறங்கிய மிதுன் (13 - ஷமி பந்துவீச்சில்) வந்த வேகத்தில் வெளியேற, கேப்டன் மொமினுல் அனு பவ வீரர் ரஹீமுடன் இணைந்து இரு வரும் அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். அசத்தலான ஆட்டத்தை  வெளிப்படுத்திய இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். அஸ்வின் கேப்டன் மொமினுலை (37) வெளியேற்ற, அடுத்த சில நிமிடங்களில் ரஹீமை (43) ஷமி பெவிலியனுக்கு அனுப்பி னார். அடுத்து களமிறங்கிய மகமதுல் லாஹ் (10 - அஸ்வின் பந்துவீச்சில்), லிட்டன் தாஸ் (21 - இஷாந்த் பந்துவீச்சில்) ஆகியோர் பெரியளவில் சோபிக்கவில்லை.   பின் வரிசை வீரர்களும் இந்திய அணியின் மிரட்டலான வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சீட்டுக் கட்டாய் சரிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களுக்கு 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டு களை வீழ்த்தினார்.  அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு  ஆரம்பமே அதிர்ச்சி காத்துக்கொண்டி ருந்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா (6) அபு ஜயத் பந்துவீச்சில் ஆட்ட மிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா  மயாங் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப் படுத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. மயாங் அகர்வால் (37), புஜாரா (43) ஆகியோர் களத்தில் உள்ளனர்.