tamilnadu

img

பாரம்பரியத்தை இழக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்

கிரிக்கெட் போட்டியை ஒழுக்கமாக ரசிக்கும் பெருமைக்கு சொந்தக்காரர்கள் இங்கிலாந்து ரசிகர்கள். சிக்ஸர், பவுண்டரி, விக்கெட் என எதுவாக இருந்தாலும் அமைதியாக இருக்கையிலேயே அமர்ந்து கைதட்டுவார்கள். சதமடித்தால் மட்டுமே எழுந்து நின்று கைதட்டுவார்கள். அதுவும் சதமடித்தது இங்கிலாந்து அணி வீரரோ அல்லது எதிரணி வீரரோ யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி எழுந்து நின்று கை தட்டுவார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் மீது கிரிக்கெட் உலகமே தனி மரியாதை வைத்துள்ளது. இத்தகைய சிறப்பு உடைய இங்கிலாந்து ரசிகர்கள் வார்னரின் உப்புத்தாள் விவகாரத்தால் தனது பாரம்பரிய பெருமையை இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.