tamilnadu

img

தோனியின்  கையுறை சர்ச்சை ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்

 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் அனுபவ வீரரும், விக்கெட் கீப்பருமான தோனியின் கையுறையில் ராணுவ முத்திரை போன்று அவரது கையுறையில் ஒரு முத்திரை இருந்தது.  இதனை உற்றுநோக்கிய சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இது ராணுவ முத்திரை போன்று இருப்பதால் அதனை உடனே நீக்கக்கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) எச்சரிக்கை கடிதம் அனுப்பியது.  அடுத்த சில மணிநேரத்தில் பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் பதில் கடிதம் அனுப்பினார். அதில், “தோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை. இந்த முத்திரை விவகாரம் குறித்து ஐசிசிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். இதில் ஐசிசி விதிமீறல் எதுவும் இல்லை எனவும், தோனி தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  கிரிக்கெட்டின் விதிமுறைப்படி நாடுகளின் கொடி, கொடியின் முத்திரை, ஒப்பந்தம் செய்யப்பட்ட விளம்பர பேனல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தப்படும். மதம், அரசியல் மற்ற முத்திரைகள் அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.