tamilnadu

img

பாலியல் வழக்கில் நெய்மருக்கு தொடர்பில்லை அட்டர்னி ஜெனரல் பரிந்துரை

பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மர் மீது அவரின் இன்ஸ்டாகிராம் தோழி சாவ்பாவ்லோ (பிரேசில்) நகர காவல் நிலையத்தில் பாலியல் புகார் (வீடியோ ஆதாரத்துடன்) அளித்தார். இந்த பாலியல் புகாருக்கு நெய்மர் மறுப்பு தெரிவித்த நிலையில், சாவ்பாவ்லோ காவல்துறை துரித விசாரணையில் களமிறங்கி,”நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை” எனக் கூறி அட்டர்னி ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியது.    அறிக்கையை ஆராய்ந்த அட்டர்னி ஜெனரல் புகாரை நிராகரித்து 15 நாட்களுக்குள் வழக்கை முடித்து வைக்க பரிந்துரைத்துள்ளார். நெய்மர் பாலியல் வழக்கு முடிவுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கொண்டாடி வருகின்றனர்.