tamilnadu

img

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்காமல் இயக்குவது கடினம் - விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் இயக்குவது கடினம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.58 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால் விமானிகள் பதவி விலக வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முயன்று வருவதாகவும், அனைத்து ஊழியர்களுக்கும் சாதகமான விஷயம் நடக்க உறுதி செய்யப்படும் என்றும், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் இயக்குவது கடினம் என்றும் கூறினார்.