காஞ்சிபுரம், டிச. 26- உத்திரமேரூரில் இயங்கி வரும் இரும்பு தொழிற் சாலையான நோபில் டெக் நிறுவனத்தின் தொழிற் சங்க பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை (டிச. 25) காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு நோபில்டெக் நிறுவன தொழிற்சங்க சிறப்பு தலை வர் இ. முத்துக்குமார் தலைமை தாங்கினார். பொதுத் தொழிலாளர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ஆர்.மதுசூதனன் வாழ்த்துரை வழங்கினார். ஜனவரி 8ஆம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட் டத்தில் பங்கேற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. நோபில்டெக் நிறுவனத் தால் பழிவாங்கும் நட வடிக்கையால் பணி நீக்கம் செய்யப்பட்ட வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் வேலை கிடைக்க சட்டரீதியாக வழக்கு தொடுப்பது என்றும், 480 நாள் பணி செய்த அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தம் செய்ய கோரி தொழிலாளர் நலத்துறையில் வழக்கு தொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகள்:-
சிறப்பு தலைவராக இ.முத்துக்குமார், தொழிற் சங்கத் தலைவராக வி.பாலாஜி, செயலாளராக சி.சண்முகம், பொருளாள ராக ஜி.விநாயகம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.