tamilnadu

img

பெங்களூரு பாஜக வேட்பாளர் மீது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு!

பெங்களூரு தெற்குத் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார். அவரின்மறைவையடுத்து, மனைவி தேஜஸ் வினி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தான் பாஜக-வினர் எதிர்பார்த்தனர். ஆனால், 28 வயது இளைஞரும்,பாஜக இளைஞரணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அனந்தகுமார் ஆதரவாளர்கள் பாஜக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாஜக வேட்பாளராக அறிவித்திருக்கும் தேஜஸ்விக்கு எதிராக பாலியல்குற்றச்சாட்டு புகாரும் கிளம்பியுள்ளது. சோம் தத்தா என்ற பெண், தேஜஸ்வி சூர்யாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதில், தேஜஸ்வியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக அவர்கூறியுள்ளார். “எல்லா இந்துக்களுமே தர்மப்படி தான் வாழ்வார்கள் என சொல்லிவிடமுடியாது. முழு உண்மை தெரியாமல், கண்ணை மூடிக்கொண்டு தேஜஸ்வியை ப்ரமோட் செய்யாதீர்கள். பெண் மோகியை, பெண்களை பயன்படுத்துபவரை, பெண்களை தாக்குபவரை நம்மை ஆள்வதற்கு அனுமதிக்கலாமா?” என்று அந்த பெண் கேட்டுள்ளார்.“சிறந்த பேச்சாளர்கள் எல்லோரும் சிறந்த மனிதர்கள் என்று சொல்லி

விட முடியாது; எனது காதலுக்கு கண்ணில்லை, அதனால்தான் தேஜஸ்வியால் 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன்; அதேநேரம் அவரால் பாதிக்கப்பட்ட முதல் பெண் நான் கிடையாது” என்றும்அதிரடி கிளப்பியுள்ளார். சோம் தத்தாவின் குற்றச்சாட்டு, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தேஜஸ்விக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேஜஸ்வி சூர்யா, பசவனகுடி பாஜக எம்எல்ஏ ரவி சுப்பிரமணியாவின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

;