tamilnadu

img

கரூரில் புத்தகத் திருவிழா துவங்கியது

கரூர், ஜூலை 20-  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் 3-ம் ஆண்டு புத்த கத் திருவிழா கரூர் கொங்கு திரு மண மண்டபத்தில் 19-ம் தேதி முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறு கிறது. புத்தக திருவிழாவை ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்து திறந்து வைத்தார். முனைவர் மரு தாச்சல அடிகளார் சிறப்புரையாற்றி னார். கரூர் வைசியா வங்கியின் இயக்கு நர் சூர்யநாராயணன், சிஇஓ சேஷாத்திரி, வி.என்.சி.நிறுவனத்தின் சேர்மன் சி.பாஸ்கர், கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் நாச்சிமுத்து, பாரதி புத்தகாலயம் நிர்வாகி பாரதி நாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். விழாக் குழு வின் கெளரவ தலைவர் ப.தங்கராசு, தலைவர் தீபம்சங்கர், செயலாளர் ஐ. ஜான்பாஷா, இணைச் செயலாளர் காம ராஜ், பொருளாளர் மு.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே புத்தகம் சேமிப்பு உண்டியல் கொடுக்கப்பட்டு அதில் சேமிக்கும் தொகைக்கு 15 சத வீதம் கழிவு விலையில் புத்தகங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த 10,000 உண்டியல்களை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் வழங்கியுள் ளது. அது மட்டுமின்றி, தனியார், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறனறி தல் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற சுமார் 30 ஆயிரம் மாணவ- மாண விகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்த கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவ- மாணவி களுக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி யில் திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கு கரூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கேடயம் மற்றும் புத்த கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 10 மாணவர்களுக்கு ரூ.500 வீதமும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு 5000 மதிப்பிலான புத்தகங்களும் பரிச ளிக்கப்படுகிறது. இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் சிறப்பம்சமாக கோளரங்கம் மற்றும் சுமார் 60 அரங்குகளில் ஆயிரக்கணக் கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக் கப்பட்டுள்ளன. தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், சிறந்த பேச்சாளர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.