tamilnadu

img

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்க! கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.7- 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2019 தேசத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு பாதி ப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கரூர் நகரம், கரூர் வட்டா ரம்,  தாந்தோன்றிமலை, கிருஷ்ணா புரம், கடவூர் ஆகிய  ஒன்றியங்களில் உள்ள வட்டார கல்வி அலுவல கங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு கரூர் வட்டார தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பிரான்சிஸ் டேனியல் ராஜா கண்டன உரையாற்றினார். சீனிவா சன், தமிழரசி, செல்வம், மோகன், சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாந்தோணி ஒன்றிய குழு சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு ஒன்றிய தலைவர் ஜான்சி ராணி தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் சுரேஷ் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலை வர் த.சகிலா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராணி, சாந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சந்திர சேகர், ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடவூர்  வட்டார கல்வி அலுவல கம் முன்பு வட்டார தலைவர் சிவசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜெ.ஜெயராஜ் கண்டன உரை யாற்றினார். மாவட்ட துணைத்தலை வர் ஜான்சன், ஒன்றிய நிர்வாகிகள் மோகன்,முனியப்பன், காமராஜ், பிச்சை, இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணாபுரம் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சரவணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர்  மோகன் கண்டன உரையாற்றினார். அல்லி மகாராணி, கந்தசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியக் குழுவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தி ற்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் காளிதாஸ் கண்டன உரையாற்றி னார். ஒன்றிய செயலாளர் பால முருகன் வரவேற்று பேசினார். மகாலிங்கம், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.