திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

பரணிபார்க் கல்விக் குழுமத்தில் “தமிழி பொங்கல் விழா”

கரூர், ஜன.11- பரணி பார்க் கல்விக் குழுமத்தில் தமிழி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரணி பார்க் பள்ளி,  பரணி வித்யாலயா பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து மொத்தம் 9 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் பெற்றோர்களுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல், பானை உடைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதிமோகனரெங்கன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

;