tamilnadu

img

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

 மன்னார்குடி: தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் அமைப்பு தின விழா முத்துப்பேட்டையில் மாவட்டத் தலைவர் தி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வீ.முனியன், துணைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். சி. செல்லதுரை வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எம்.சுப்ரமணியன் துவக்கவுரையாற்றினார். ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சண்முகம், காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்க நா.ராஜ்மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மாநிலச் செயலாளர் குரு சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார். ஆர்.தமிழரசன் நன்றி கூறினார். பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேராவூரணி வட்டக் கிளை சார்பில் சங்க அமைப்பு தின கூட்டம் வட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆர்.ஜெயபாலன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். வட்டத் தலைவர் கணே.மாரிமுத்து தலைமை வகித்தார். வட்ட செயற்குழு உறுப்பினர் மு.வீரப்பன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் க.மாணிக்கம் நன்றி கூறினார்.