நாகர்கோவில், ஜூலை 20- தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கிகளில் வழங்கி வந்த நகை கடன்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித் ்தும், கடன் திட்டத்தை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றுவதைக் கைவிடக் கோ ரியும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜே. சைமன் சைலஸ், துணை தலைவர்கள் என்.முருகேசன், டி.ஆறுமுகம் பிள்ளை, துணை செய லாளர் எஸ்.விஜி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.