வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

சாராட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குவர்கள்

சிதம்பரம், ஜன.21- கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சி யில் சாலையோரம் வசிக்கும் நரி குறவர்கள்  60-க்கு மேற்பட்டோர் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசேகர்,வார்டு உறுப்பினர் தமிமுன்அன்சாரி ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்டு சாராட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தி னர். பிறகு, சாராட்சியர் விசுமகாஜன் சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர்.  அந்த மனுவில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த லால்புரம் பகுதியில் சாலை ஒரம் பல   ஆண்டுகளாக வசித்து வருகிறோம். சிலரது  குடிசைகள் பிரிக்கப்பட்டு மிகவும் கஷ்ட மான சூழ்நிலையில் வசித்து வருகி றோம். எங்களுக்கு நிரந்தரமாக வீடுகள்  கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மனுவை பெற்று கொண்ட சாராட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார்.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

;