tamilnadu

img

வெற்றி பெற்ற சிபிம் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற ஜி.மாரியப்பன் திங்களன்று (ஜன.6) பதவியேற்றுக்கொண்டார். சிபிஎம் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பஞ்சாயத்து செயலாளர் கவிதாராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

**************

புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேதநாயகி திங்களன்று (ஜன.6) பதவி ஏற்றுக்கொண்டார்.

**************

பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என். ஜெயசீலன் திங்களன்று (ஜன.6) பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;