tamilnadu

img

அலங்காநல்லூரில் சீறிப்பாய்ந்த காளைகளும், காளையரும்

இருவர் பலி;  36 பேர் காயம்

மதுரை, ஜன.17- உலகப் புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை காலை   எட்டு மணிக்குத் துவங்கியது.  மாலை ஐந்து மணி வரை நடை பெற்றது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மக்கள வை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்,  ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், ஜல்லிக் கட்டு பேரவை தலைவர் ராஜ சேகர் ஆகியோர் போட்டி யை துவக்கி வைத்தனர்.   முன்னதாக மாடுபிடி வீரர்கள்,  காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் ஆட்சியர் தலைமை யில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.  வாடிவாசல் பகுதியில்  இருந்து முதல் மரியாதை செய்யப்பட்ட மூன்று காளை முதலில் அவிழ்த்துவிடப் பட்டது. பின்னர், ஜல்லிக் கட்டு விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின்  சின்ன கொம் பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் மூன்று காளைகள் சீறிப் பாய்ந்தன. காளைகளை யாரும் அடக்க முடியவில்லை.

ஐல்லிக்கட்டில் பங் கேற்க  739 காளைகள், 877 மாடுபிடி வீரர்கள் பங்குபெற பதிவு செய்திருந்தனர்.  ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற அடிப்படையில் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். 739 காளைகளில் அனைத்தும் களமிறக்கப்பட்டன. 877 மாடுபிடிவீரர்களில் 688 பேர் களமிறக்கப்பட்டனர்.  18  மாடு பிடிவீரர்கள். மாட்டின் உரிமையாளர்கள் பத்து பேர், பார்வையாளர்கள் எட்டு  பேர் என மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். இவர் களில் 13 பேர் மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டி வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, அண்டா, குக்கர், கேஸ் ஸ்டவ், செல்போன், கிரை ண்டர், மெத்தை, பொங்கல் பானை, ரூ.1000 ரொக்கப் பரிசு, இரண்டு பவுன் தங்கச் செயின் உட்பட பல்வேறு  பரிசுகள் வழங்கப் பட்டன. அதிக காளைகளை அடக்கியவருக்கும், பிடி படாத மாட்டின் உரிமை யாளர்களுக்கும் கார் பரி சளிக்கப்பட்டது.

காளைகளுக்கு பரிசு

களமிறக்கப்பட்ட காளை களில் மதுரை குலமங்கலம் மார்நாடு காளை முதல் பரி சையும், இரண்டாம் பரிசை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அணுராதா வின் காளை(ராவணன்) யும் மூன்றாம் பரிசை ஜி.ஆர்.கார்த்திக் காளையும் பெற்றன. முதல் பரிசை வென்ற மார்நாடு-க்கு கார்  மற்றும் கோப்பை பரிசளிக்க ப்பட்டது. இரண்டு, மூன்றாம் பரிசு பெற்ற வர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட் டன.

மாடுபிடிவீரர்கள்

16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த  ரஞ்சித்குமார் முதல் பரிசை யும், அழகர்கோவில் வலைய பட்டியைச் சேர்ந்த கார்த்திக் 14 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசை யும்,  மேலூர் அரிட்டாபட்டி யைச் சேர்ந்த கணேசன் 13 காளைகளை அடக்கி மூன் றாம் பரிசையும் பெற்றார். முதல்பரிசு வென்ற ரஞ்சித் குமாருக்கு நான்கு பசுமாடு கள், ஹோண்டாய் கார் பரி சளிக்கப்பட்டது. இரண்டாம் பரிசாக கார்த்திக்குக்கு பைக்  பரிசளிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் கணேச னுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்க ணக்கான அதிகமான மக்கள் வந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் துள்ளிவந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர் களை உற்சாகப்படுத்தினர். 

லேசான தடியடி

அலங்காநல்லூர் ஜல்லி கட்டில் காளைகளை அவிழ்த்து வரிசையாக கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து லே சான  தடியடி நடத்தப்பட்டது.

பரிசை தட்டிச்  சென்ற காவ்யா

ஜல்லிக்கட்டிற்கு காவ்யா என்ற சிறுமி  தான் வளர்த்த காளையை கொண்டு வந்திருந்தார். அவரது காளை வீரர்களின் கையில் பிடிபடாமல் ஓடிவிட்டது. இதையடுத்து அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாடு குத்தி பிரபாகரன் காயம்

மதுரை பாலமேடு ஜல்லிக் கட்டில் வியாழனன்று 16 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், வெள்ளி யன்று மதுரை அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஒரு காளையை அடக்க முயன்ற போது, அது அவரது கழுத்தில் குத்தியது. இதில் காய மடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

இருவர் பலி

மதுரை சோழவந்தான் சங்கங்கோடையைச் வீர பத்திரன் மகன் பொறியாளர் ஸ்ரீதர்(27). தற்போது இராம நாதபுரம் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். வெள்ளி யன்று தனது நண்பர், அவரது காளையுடன் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்துள்ளார். வாடிவாசல் பகுதியிலிருந்து மாட்டை கயிறு கட்டி இழுக்க முயற்சித்தபோது பின்னால் வந்த மாடு இடுப்புப் பகுதி யில் குத்தியது. இதில் படு காயமடைந்த ஸ்ரீதர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை செக்கானூரணி யைச் சேர்ந்த மாயாண்டி மகன் செல்லப்பாண்டி (40). கலர் குடித்துக்கொண்டிருந்த போது மாடு வருகிறது என்ற சத்தம் கேட்டு திரும்பிய அவர் அதிர்ச்சியடைந்து சம்பவஇடத்திலேயே மயங்கி விழுந்தார். மேல் சிகிச் சைக்காக இராஜாஜி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். 

;