வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

சிறு குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கோவை, ஆக. 22 - சிறு குறுதொழில்கள் பின்னடைவைச் சந் தித்துள்ளதால் தமிழக அரசு ஆறு மாத காலத் திற்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டு மென காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலை வர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியா ளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறுகை யில், சிறு குறுதொழில்கள் பின்னடைவைச் சந் தித்துள்ளதால் தமிழக அரசு ஆறு மாத காலத் திற்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். வழிபடுதல் குறித்த கொள்கையெல்லாம் அவரவர் சார்ந்த முடி வாகும். இருப்பினும் இந்தியர்களாகிய நாம்  மதச்சார்பின்மை என்னும் ஒரே நேர்க்கோட் டில் இணைந்துள்ளோம். ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு வேண்டாம் என்று அந்த அரசு முடிவு செய்தால் அந்தத் தேர்வை நிறுத்தி விடலாம். அதற்கான சாத்தியப்பாடு களும் மாநில அரசிற்கு உள்ளது. எனவே நீட் தேர்வு குறித்த தெளிவான முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறி னார்.

;