tamilnadu

img

குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை, ஆக. 27- பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி கூறினார். 30 விழுக்காடு பெண்கள் மட்டுமே பெண்மையுடன் இருக்கிறார்கள் என்று பேசிய குருமூர்த்தியை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, வடசென்னை மாவட்டச் செய லாளர் பாக்கியம், பொருளாளர் கோட்டிஸ்வரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் சரவண செல்வி, செயலாளர் செல்வி, மனோன்மணி (இலவச சட்ட மையம்), நர்மதா பொன்னுசாமி (புதிய குரல்), செண்பகம் (பெண் தொழிலாளர்கள் சங்கம்), காஞ்சனா (உழைக்கும் பெண்கள் சங்கம்) உள்ளிட்ட ஏராளமான அமைப்பைச்சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர். செய்தியாளர்களிடம் பி.சுகந்தி கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி மருத்துவமனை திறப்பு விழாவில் பேசும் போது, பெண்களில் 30 விழுக்காடு பெண்கள் மட்டுமே பெண்மையுடன் இருக்கிறார்கள். அந்த 30 விழுக்காடு பெண்களை நான் தெய்வமாக வணங்குகிறேன் என்றும் பேசியுள்ளார். நகர்ப்புற வாழ்க்கையும், ஆங்கிலம் கற்பதும்தான் பெண்மையோடு இல்லாததற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த ஆணவமான ஆணாதிக்க பேச்சை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர். செய்தியாளர்களிடம் பி.சுகந்தி கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி மருத்துவமனை திறப்பு விழாவில் பேசும் போது, பெண்களில் 30 விழுக்காடு பெண்கள் மட்டுமே பெண்மையுடன் இருக்கிறார்கள். அந்த 30 விழுக்காடு பெண்களை நான் தெய்வமாக வணங்குகிறேன் என்றும் பேசியுள்ளார். நகர்ப்புற வாழ்க்கையும், ஆங்கிலம் கற்பதும்தான் பெண்மையோடு இல்லாததற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த ஆணவமான ஆணாதிக்க பேச்சை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

டாக்டர் அம்பேத்கர் உரு வாக்கிக் கொடுத்த அரசியல் சட்டத்தை அடியோடு நொறுக்கி விட்டு மீண்டும் மனுதர்மத்தை கோட்பாடாக இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். அத னுடைய ஒரு பகுதியாகத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் இப்படி பெண்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள். பாஜகவில் பெண்களே இல்லையா? அப்படியென்றால் இப்படி பேசும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினரை ஏன் தமிழிசை சவுந்தரராஜன் கண்டிக்கவில்லை. பாஜக பெண் தலைவர்கள் ஏன் கண்டிக்கவில்லை. எனவே பெண்களை இழிவுபடுத்தி பேசிய குருமூர்த்தி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமூர்த்தி உடனடியாக தனது  இழிவான பேச்சை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க  வேண்டும். இல்லையென்றால் அனைத்து பெண்கள் கூட்ட மைப்பு சார்பில் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.