சிபிஎம் ஆர்ப்பாட்டத்தால் பணிகள் நிறுத்தம்
தஞ்சாவூர், ஜன.24- பூதலூர் அருகே விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதையடுத்து எரிவாயு குழாய் பதிக்க வந்த அலுவலர்கள் தமது முயற்சி யைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். மத்திய அரசு, பொதுமக்கள் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபடலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தேவை யில்லை என சொல்லி உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி, புதுப்பட்டி அருகே நெல் மற்றும் எள் சாகுபடி செய்யப் பட்டிருந்த இடத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறு வனம் சார்பில், எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதை யடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கள், விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமது சுல்தான், சோலை ரமேஷ், மருதமுத்து, விஜயகுமார், தமிழ்ச்செல்வன், சந்திரபோஸ், பால சுப்பிரமணியன், எம்.ஜி.சரவணன், பழனிச்சாமி, அறிவழகன், வியாகுல தாஸ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு வந்த பூதலூர் வட்டாட்சியர் சிவகுமார், காவல் ஆய்வா ளர் முருகேசன் ஆகியோர் சிபிஎம் மற்றும் விவசாய சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் “விவசாயிகள் கருத்து கேட்டு, பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடை பெறும்” என தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் குழாய் பதிக்கும் பணி நடந்தால் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.