tamilnadu

img

தமிழகத்திற்கு ஏப்ரல் மாத இழப்பு ரூ.48,412 கோடி

மதுரை, மே 13- கொரோனா பரவலால் ஏப்ரல் மாதத் திற்கான சொந்த வருவாயில் தமிழகத்திற்கு, 48,412 கோடி இழப்பு (70.4 சதவீதம்) ஏற்பட்டி ருக்கலாம் என இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி  (இந்த்-ரா) மதிப்பீடுசெய்துள்ளது. இந்த்-ரா-வின் இணை இயக்குனர் அனுராதா பசுமதாரி மற்றும் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா ஆகியோ தயாரித்துள்ள அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது ஏப்ரல் மாதத்தில் மட்டும் 97,100 கோடி ரூபாய் வருவாய் இழப்பை முக்கிய மாநிலங்கள் இழந்துள்ளன. கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங் கானா ஆகிய மாநிலங்கள் தங்கள்  சொந்த  வருவாயில் 65-76 சதவீதத்தை இழந்துள்ளன.