tamilnadu

img

மக்களாட்சிக்கு ஆதிக்க சக்திகள் விடும் சவால் - பேரா.க.பழனித்துரை

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த உடனே ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. கிராமங்களில் சிற்றூராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் மட்டுமல்ல குலுக்கல் முறையிலும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்திகள் அனைத்தும் புகைப்படம் வீடியோ, ஊர்  பெயர் ஒன்றியம், மாவட்டம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இதுபோன்ற நிகழ்வு கள் கடந்த தேர்தலிலும் நடந்துள்ளதை நாம் பார்த்துள் ளோம். இதே போன்று அப்போதும் நாம் விவாதித்தோம். அதன் பிறகு மறந்து விட்டோம். அதன் விளைவு மீண்டும் இந்த வியாதி இந்த முறையும் நம்மை பீடித்து விட்டது.  இந்த நிகழ்வுகள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வில்லை. ஒருசில குறிப்பிட்ட மாவட்டங்களில் தான் நடந் தேறுகின்றன இந்த நிகழ்வு என்பதை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஊடகங்களும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மக்களாட்சியின்மேல் விழுந்த ஒரு கரும்புள்ளி. 

கரும்புள்ளியை நீக்க,  சவாலை சந்திக்க

அடுத்து இந்த நிகழ்வின் மூலம் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஆதிக்க சக்திகள் அரசியல் சாசனத்திற்கு சவால் விடுத்துள்ளன. இந்த கரும்புள்ளியை நீக்கவும், சவாலை சமாளிக்கவும் அரசு இயந்திரமும், மக்களாட்சி அமைப்புக்க ளும் சட்டத்தின் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் மிகவும் கடுமையாகவும், அவசரமாகவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெறுவதால் அந்த மாவட்டங்களை அடையாளம் கண்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அரசு இயந்தி ரத்திற்கு பெரும் செயல் அல்ல. ஆனால் இந்நிகழ்வுகளை கையாள்வதற்கு தீவிர முனைப்பை தேர்தல் ஆணைய மும், அரசு இயந்திரமும் காட்டவில்லை என்பதுதான் நாம் இன்று களத்தில் பார்க்கும் எதார்த்தம்.  இந்தச் சமூகங்களுக்கு அரசியல்சாசனச் சட்டத்தை யும் அரசாங்கத்தின் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்க்கும் துணிவு எங்கிருந்து வருகிறது என்பதுதான் இங்கு வைக்கப்பட வேண்டிய அடிப்படையான கேள்வி. கிராமங் கள் இன்றும் ஆதிக்க சக்திகளின் பிடியில்தான் உள்ளன என்பதை இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. எங்களி டம் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்கு வந்தாக வேண்டும் என்று எண்ணும்போது, அரசாங்கம் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற எண்ணம் இந்த சக்திகளுக்கு மேலோங்கி இருக்கிறது. 

அரசு இயந்திரங்களும் தேர்தல் ஆணையமும்

இன்று அரசு இயந்திரங்கள் மாநில தேர்தல் ஆணை யத்தின் கீழ் இயங்குகின்றன. தேர்தல் முடியும்வரை அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கை யும் எடுக்க எல்லாவித அதிகாரத்தையும் பெற்றது, அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணை யம். சட்டத்தின்படி ஆட்சி என்றால் அரசியல் தலையீட்டிற் காகவோ, மேலிருந்து உத்தரவு வருவதற்காகவோ காத்திரா மல் அரசு இயந்திரம் அந்தந்த நிலையில், அவரவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசு இயந்தி ரம் என்பது சுதந்திரமாக வழங்கப்பட்ட அதிகாரத்தையும், பொறுப்பையும் பொறுப்புடன் நடைமுறைப்படுத்துகின்றது என்று பொதுமக்கள் கருதுவார்கள்.  இதற்கு அரசு இயந்திரம் செயல்பட துணியாமல் மேலிருந்து உத்தரவு வரட்டும் என்ற நிலையில் செயல்பட் டால், அரசு இயந்திரம் செயலிழந்து வருவதாகத்தான் நாம் கருத வேண்டும். ஏனென்றால் இந்த நிகழ்வு அங்கொன் றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அது தெரிவிக்கின்ற செய்தி என்பது, அம்பேத்கர் சொன்ன ஆதிக்கத்தின் வெளிப் பாடு. ஆதிக்க சமூகம் முடிவெடுத்து அறிவித்து மக்களை மிரட்டுகின்றது என்பதுதான் பொருள். அரசியல் சாசனம் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடத் தந்த வாய்ப்பை சமூகம் தட்டிப் பறித்து, தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்த முனையும்போது, அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் வைத்திருக்கும் அரசு இயந்திரம் முனைந்து செயல்பட வேண்டும். அதற்கான செயல்பாட்டில் ஓரிடத்தில் முழுவீச்சில் ஈடுபட்டி ருந்தால் மற்ற இடங்களுக்கு இது பரவாமல் இருந்தி ருக்கும். தற்போது தினந்தோறும் பதவிகள் ஏலம் விடும் செய்திகள் மாவட்டம்தோறும் வந்த வண்ணம் இருக்கின் றன. இதற்கு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய ஆணையம் அறிவிப்போடும் எச்சரிக்கை செய்வதோடும், நின்றுவிடுமேயானால், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கு வதற்கு அரசியல் சாசனத்தை புறக்கணிப்பதற்கு துணை போன அவப்பழியை மாநில தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்த ஏலம் போடுவதை தட்டிக் கேட்ட காரணத்தால் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அது மட்டு மல்ல, இந்த ஏலங்களை எதிர்த்து அரசு அலுவலர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் மனுச் செய்துள்ளதும் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

ஜனநாயகப்படுத்தப்படாத கிராமப்புற சமூகம்

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு கருத்தும் உள்ளது. சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கிராமப்புற சமூகம் ஜனநாயகப்படுத்தப்படவில்லை, ஜாதிய ஆதிக்கத்தோடு தான் நம் கிராமங்கள் இயங்குகின்றன என்பதுதான் அந்தக் கருத்து. இதையும் தாண்டி சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய அரசியல் கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ள னவோ என்ற கேள்வியும் எழுகின்றது. ஆனால் இந்த ஆதிக்கத்தை, ஜாதிய ஆதிக்க மனோபாவத்தை, ஆதிக்க செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்துப் போராடும் சக்திக ளான இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தால் தங்கள் வாக்கு வங்கிகளை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற எதார்த்தத்தையும் வைத்துப்பார்க்கும்போது, அரசி யல் கட்சிகள் வாக்கு அரசியலில் ஈடுபட வேண்டியிருப்ப தால், இந்தப் போராட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அரசு இயந்திரங்களின் மீதும், மாநில தேர்தல் ஆணையத்தின் மீதும் பொறுப்பை சுமத்திவிட்டு தாங்கள் ஆற்ற வேண்டிய சமுதாயத்தை ஜனநாயகப்படுத்தும் பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் ஊர்ப்பஞ்சா யத்து இயங்கி வருவதும், ஊர் நாட்டாண்மை இயங்கி வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பல கிராமங்க ளில் இந்த அமைப்புக்கள் வலுவான நிதி ஆதாரத்தோடும் செயல்பட்டு கிராமங்களில் பல பொதுப்பணிகளை தொண் டாகவும் செய்து வருகின்றன. 

கட்சி அடிப்படையில் தேர்தல்

பல கிராமங்களில் இந்த ஊர் பஞ்சாயத்து என்பது சமூகக் கோயில்பணிகளையும் சமூகப் பிணக்குகளைத் தீர்க்கும் வேலைகளையும் செய்து வருகின்றது. இப்படிப் பட்ட பஞ்சாயத்துக்கள் எப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டி ருந்தாலும் அவைகள் அனைத்தும் எல்லாத்தரப்பு மக்க ளையும் உள்வாங்கியதாக ஒரு குட்டிக் கிராமக் குடியாட்சி யாக செயல்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட பதவியை ஏலம் விட்டவர், ஏலம் எடுத்தவர், அந்த நிகழ்வில் கலந்தவர்கள் அனைவர் மேலும் மிகக்கடுமையான நடவ டிக்கை எடுத்திட வேண்டும். அதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசு இயந்திரம் செயல்பட ஒரு நெருக்குதலை உருவாக்க வேண்டும். அடுத்த நிலையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவியை யும் கட்சி அடிப்படையில் கேரளாபோல், மேற்கு வங்கம் போல் தேர்ந்தெடுத்திட வழிவகை செய்துவிட்டால் இந்த  ஏலம் விடும் பழக்கம் என்பது நிச்சயமாக செயல்படுவதற்கு சாத்தியக் கூறு இல்லாமல் போய்விடும். 

இன்றும் தமிழகத்தில், தேர்தல் முடிந்து கிராமப் பஞ்சாயத்துக்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது, அரசி யல் கட்சிகளில் பொறுப்பிலுள்ளவர்களைத் தவிர மற்ற அனைத்து சிற்றூராட்சித் தலைவர்களும் அவர்களுடைய லெட்டர் பேடில் மாநில முதல்வர் படத்தைப் போட்டு தங்களை ஆளும்கட்சிக்காரராக காட்சிப்படுத்தும் ஒரு கலாச்சாரம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு மாநில அரசுடன் ஒத்துப் போனால்தான் எதாவது பஞ்சாயத்துப் பணிகளை செய்ய முடியும் என்ற நிலைக்கும் அரசியல் பார்வை வந்து விட்டது. எனவே கட்சி அடிப்படையில் இந்தப் பதவியையும் கொண்டு வருவதால் தவறு ஏதும் நடக்கப்போவது இல்லை.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கிராமத்தி லும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றிய கம்பூர் ஊராட்சியில் நடப்பதுபோல் ஒரு தன்னார்வக்குழு எங்கள் பணத்தை எவரும் கையாட அனுமதிக்க மாட்டோம் என்று விழிப்புடன் செயல்படுவார்கள் என்ற நிலைக்கு வந்து விட்டால், இந்தப் பதவிகளை எவரும் ஏலம் எடுக்கவும் மாட்டார்கள். தேர்தலுக்கு பெருமளவில் பணத்தை செலவு செய்யவும் யாரும் முன்வர மாட்டார்கள். வாக்குகளுக்கு பணம் தந்து தங்கள் வெற்றியை உறுதி செய்யவும் மாட்டார் கள். அத்துடன் உள்ளாட்சிப் பதவிகளுக்கு பெரும் பணம் செலவழித்து தேர்தலைச் சந்திக்க நம் மக்கள் தயங்கு வார்கள். 

அரசியல் கட்சிகளின் பங்கு 

எனவே இந்த மக்களாட்சி விரோதச் செயல்பாடுகளைக் களைய பல்முனைச் செயல்பாட்டிற்கு தமிழகம் தயாராக வேண்டும். அதற்கு முதலில் மாநில தேர்தல் ஆணையமும், அரசு இயந்திரமும், முனைந்து செயல்பட வேண்டும். இதை விட மிக முக்கிய அரசியல் கட்சிகள் இந்த மக்களாட்சிக்கு எதிர்மறைச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஆதிக்க சக்திக ளை எதிர்த்துச் செயல்பட வேண்டும். கட்சிகள் ஆதிக்க சக்தி களை பயன்படுத்த முனைவதால்தான் இப்படிப்பட்ட மக்க ளாட்சி எதிர்மறை நிகழ்வுகள் கிராமங்களில் நடந்தேறு கின்றன. எனவே அரசியல் கட்சிகளுக்கு இதில் மிக முக்கிய மான ஒரு பங்கு இருக்கிறது. அதை உணர்ந்து அவைகள் செயல்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் இடதுசாரிகளுக்கும், ஒடுக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கும் ஒதுக்கப்பட்ட செயல் பாடு போன்று மற்ற அரசியல் கட்சிகள் நினைத்து வாக்கு வங்கிக்காகச் செயல்படும் சூழலை மாற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் தலையில் இந்தப் பிரச்சனையைக் கட்டிவிட்டு தப்பிக்க வழி பார்க்கா மல் மக்களாட்சிக்கான ஜனநாயகக் கடமையான சமூ கத்தை ஜனநாயகப்படுத்துதலை தொடர்ந்து செய்திடல் வேண்டும். அப்போதுதான் இந்த மாதிரியான மக்களாட்சி எதிர்மறைச் செயல்பாடுகள் குறையும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

 

;