3 மாதத்தில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுதில்லி, ஜன.18- நாடு முழுவதும் தாலுகாக்கள் தோறும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. இதுதொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித் தது. அதில், இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் விசாரித்தது. அப்போது, பள்ளிகள் எங்கு திறக்கப்பட வேண்டும் என்பது குறித்து நீதி மன்றம் முடிவு செய்ய முடியாது என் றும் இருப்பினும், தாலுகாக்கள் தோறும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.