tamilnadu

img

சாதிரீதியாக வார்டுகள் பிரிப்பு பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 18- ஈரோடு அருகே சாதிரீதியாக வாக்காளர்களைப் பிரிப் பதை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், வெங்கம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட  காசிபாளையத்தில், 2 ஆவது மற்றும் 3 ஆவது வார்டுக ளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார் கள். இந்த வார்டுகளில் 1100 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 400 வாக்காளர்களை பிரித்து 4ஆவது வார்டு வெங்கம்பூர் கிராமத்தில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக தலித் வாக்காளர்களை மட்டும் பிரித்து வெங்கம்பூர் வார் டில் இணைத்துள்ளார்கள். அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுமையாக வாழும் இவ்வூர் மக்களைப் பிரித்து, பிரச்சனைகளை உருவாக்கத் திட்டமிட்டு சதி செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். வார்டு மறுவரை என்ற பெயரில் சாதிவாரியாகப் பிரிக்காமல், பழைய முறையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து சமுதாய மக்களும் வெங்கம்பூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஒருவாரத் திற்குள்  உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர். இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் இல்லையெனில், சாலை மறியலில் ஈடுபடுவோம், வாக்காளர் அடையாள அட்டை  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு, வாக்களிப் பதை புறக்கணிப்போம் எனகூறி கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.