வீட்டுமனை வாங்கி தருவதாக மோசடி
ஈரோடு, ஜூலை 1- ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் நாராயணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யபாமா. இவரிடம் கடந்த 2012ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், குமராபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் களான ராமஜெயம், கௌரிசங்கர், தாமஸ், ஆர்.பாக்கியலட்சுமி ஆகியோர் சத்யபாமாவை அணுகி பெருந்துறை சிப்காட் அருகில் கந்தகுரு நகர் என்ற பெயரில் சொந்தமாக நிலம் வாங்கி மனையாக மாற்றி விற்பனை செய்து வருவதாகவும், மாதாந்திர தவணையில் பணம் செலுத்தினால் குலுக்கல் அடிப்படையில் மனையை கிரையம் செய்து தருவ தாகக் கூறி உள்ளனர். இதனை நம்பி கடந்த 13.1.2012 முதல் 27.10.2015 வரை மாதம் 2 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். 4 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் நிலம் கொடுக்கப்படவில்லை, அது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் மாதேஸ்வரனை அணுகி சத்யபாமா இது குறித்து கேட்டுள்ளார். ஊருக்குள் விசாரித்ததில், இவரைப் போல் ஏற்க னவே நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பது தெரிய வந்தது. மேலும், பெருந் துறை சிப்காட் பகுதியில் ஒரு சில ஏக்கர் மட்டுமே மாதேஸ்வரன் வைத்துக் கொண்டு அதை அனை வருக்கும் காட்டி கிரயம் செய்து கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சங்களை ஏமாற்றியுள்ளார். ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, தனக் கும், தன்னைப்போல் ஏமாற்றப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்குரிய தொகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தார்.
பொதுமக்களிடம் அத்துமீறல் பொள்ளாச்சியில் திருநங்கைகள் புகார்
பொள்ளாச்சி, ஜூலை 1- பொள்ளாச்சி பகுதியில் வெளியூர் வாழ் திரு நங்கைகள் இருவர் பொதுமக்களிடம் அத்து மீறி தகாத முறையில் நடந்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கையர் நலச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர் பகுதி களில் கடந்த சில மாதங்களாக வெளியூரைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் பொதுமக்களிடம் வழிப்பறி செய்தும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்களிடம் மிரட்டி பணத்தை பறித்து செல்கின்றனர். இதனால் கூலித் தொழில் செய்தும், சமையல் உள்ளிட்ட சுய தொழில் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்ற எங்களை போன் றோருக்கு, சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களைக் கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவி நிலாம்மா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. முருகாத்தாள், நூறும்மா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
தொழிற்சாலைக்காக தண்ணீர் எடுக்க தடை விதிக்க கோரிக்கை
ஈரோடு, ஜூலை 1- பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஆழ்குழாய் கிணறு அருகே தனியார் கிணறு அமைத்து தொழிற் சாலைக்கு தண்ணீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம்வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, எக்கட்டாம் பாளையம் மற்றும் அய்யம்பாளையம் பகுதியில் 500 க் கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் அய்யம்பாளையம், சில் லாங்காட்டு வலசு, புதுப்பாளையம் போன்ற பகுதிக ளில் உள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார் கள். இந்நிலையில், கிணற்றிற்கு அருகில் 250 அடிக் குள்ளாக தனிநபர் நிறுவனம் புதியதாக 70 அடி ஆழத் திலுள்ள கிணற்றை வாங்கி ஆழப்படுத்தி அகலப்ப டுத்துவதாக பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. அப்படி கிணற்றை ஆழப்படுத்தி வணிக தொழில் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் போது அருகில் உள்ள பொது மக்களுக்கான குடிநீர் தேவையை நிறை வேற்றும் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் பற்றாக் குறை ஏற்படும். மேலும்தண்ணீர் இல்லாமலும் போகும்நிலை உருவாகியுள்ளது. எனவே, தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என வலி யுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
ரூ.3 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜூலை 1- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 110 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,200 முதல் ரூ. 6,500 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ. 5,850 முதல் ரூ. 5,980 வரையிலும், மூன் றாவது ரக நிலக்கடலை ரூ, 4,910 முதல் ரூ. 5,150 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.