கோபி, செப்.5- தொழிலாளர் நலச்சட்டங் களை திருத்தம் செய்துள்ளதை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி கோபிசெட்டிபாளை யத்தில் சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மத்திய பாஜக மோடி அரசு விவசாயிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், விவசாய விளைபொருட்க ளுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயத் தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய் துள்ளதை திரும்பப்பெற வேண் டும். சேலம் உருக்காலை உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங் கள் தனியாருக்கு தாரை வார்க் கும் முயற்சியைகை விட வேண்டும். விவசாய வாழ்வாதா ரப் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைள் புறக்கணிக் கக்கூடாது. பொதுவிநியோகத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டத்தைகை விட வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழி லாளர்கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கம், சிஐடியு, மாதர் சங்கம் சார் பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க மாவட்ட பொரு ளாளர் மாரப்பன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத் தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்ள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் விஜயராகவன், மாவட்ட செயலாளர் சண்முக வள்ளி, மாவட்ட துணைத் தலை வர் மாணிக்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அய்யாவு, மாவட்டச் செயலாளர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் வெங்கிடு சாமி, சிஐடியு மாவட்ட தலை வர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கத்தினர் மற்றும் விவசாயத் தொழிலா ளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.