ஈரான் ராணுவ தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 35 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வாரம் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரன் ராணுவ தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் ஈரான் தலைநகரம் தெஹ்ரானில் நேற்று நடந்தது. இதில் சுமார் 10 லட்சம் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகி உள்ளதாகவும், 48 காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.