tamilnadu

img

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பைத்தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகனம் செய்து அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்துள்ளார்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குண்டு வெடிப்பு நடத்த இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 9பாகிஸ்தானியர்கள்,9 இந்தியர்கள் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.  

அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றுது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து  இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்து இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்துள்ளார்.