கோவை, ஜன. 25 - கோவை கவுண்டம்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திடீ ரென தீப்பற்றி பேருந்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், சனியன்று TN-01 AN 2371 என்ற எண் கொண்ட எஸ்.இ.டி.சி., பேருந் தானது திடீரென தீப்பற்றி எரியத் தொடங் கியது. இதையடுத்து வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமனைக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். மேலும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்ததால் தீயானது அருகே உள்ள பேருந்துகளில் பர வாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.