tamilnadu

img

குமரி மாவட்ட தியாக ஜோதிகள் சங்கமம்

ஜன.23-27 சிஐடியு அகில இந்திய மாநாடு

நாகர்கோவில், ஜன.20- சென்னையில் ஜனவரி 23 முதல் 27 வரை நடைபெறும் சிஐடியு அகில இந்திய மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் தோழர் ஜே.எச் நினைவு ஜோதி பயண வரவேற்பு மற்றும் குமரி மாவட்டத்தின் 52 தியாகிகள் நினைவு ஜோதி சங்கம நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு திடல் முன்பு ஞாயிறன்று நடைபெற்றது.  சுரண்டலை ஒழிக்க சோசலிசமே மாற்று, மற்றவை எல்லாம் ஏமாற்று என்ற கோஷத்துடன் சிஐடியுவின் 16 வது அகில இந்திய மாநாடு ஜனவரி 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்கான தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுச் சுடர் பயணம் ஞாயிறன்று மாத்தூரில் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்திலிருந்து துவங்கியது.  மேலும் குமரி மாவட்டத்தில் சிஐடியுவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 52 தோழர்களின் நினைவிடத்தில் இருந்து நினைவு ஜோதிகள் பயணமாக எடுத்துவரப்பட்டன. 

தோழர் ஜே.எச் நினைவு ஜோதியுடன் அவை சங்கமிக்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கே.மோகன் வரவேற்றார். முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், சிஐடியு மாநில செயலாளர் ஆர்.றசல் ஆகியோர் பேசினர். சிஐடியு நிர்வாகி அஸீஸ் நன்றி கூறினார். இதில், சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமோகன், மாநில செயலாளர் மோகன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட பொருளாளர் சித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஆகி யோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 52 நினைவு ஜோதிகள் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் இருந்து அண்ணா விளையாட்டு திடல் முன்பு வரை பேரணியாக எடுத்துவரப்பட்டன.