tamilnadu

img

ஃபிரண்ட்லைன் இதழ்  

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி ஃபிரண்ட்லைன் இதழ்  சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழ் கட்டுரைகள் மற்றும் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ என்ற தலைப்பிலான  புத்தகத்தை ஃபிரண்ட்லைன் இதழ் பதிப்பித்துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஆக.6) சென்னையில் நடைபெற்றது. இந்து என்.ராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதழின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பெற்றுக்கொண்டார். ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் உடன் உள்ளார்.