tamilnadu

img

கடலில் தத்தளித்த 8 மீனவர்கசுள் மீட்பு

புவனேஸ்வர்,நவ.9- புல்புல் புயல் காரணமாக, படகு கவிழ்ந்து, கடலில் தத்த ளித்த 8 மீனவர்கள்  மீட்கப்பட்ட னர். ஒடிஷா மாநிலம் பத்ராக் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றி ருந்தனர்.  அப்போது புல்புல் புயல் காரணமாக அவர்களது படகு கவிழ்ந்தது. அங்கிருந்து நீந்திச் சென்ற மீனவர்கள் கலிபாஞ்சா திஹா தீவில் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சென்ற பேரிடர் மீட்புப் படையினர்  மீனவர்களை கண்டுபிடித்து, பத்திரமாக மீட்டு கடற்கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி கள் வழங்கப்பட்டு, உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.