tamilnadu

img

உலகம் ஒப்புக்கொண்டிருக்கும் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்திடுக!

ஐ.நா.பொதுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை, அவர் தன்நாட்டில் ஆற்றியிருக்கும் நலத்திட்டங் கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களைப் பட்டிய லிடக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. மனிதகுல ஒற்றுமைக்கு அறைகூவல் விடுப்பதில் ஒரு தீர்க்கதரிசியைப் போல நடந்துகொண்டார். ஆயினும் அவரும் அவருடைய கட்சியும் இந்தியாவில் பின் பற்றும் நடவடிக்கைகள் நாட்டின் வேற்று மையில் ஒற்றுமைகாணும் பண்பிலிருந்து விலகிச் செல்லக்கூடிய விதத்திலேயே இருந்துவருகிறது. வீட்டுவசதி, சுகாதாரப் பாதுகாப்பு, வங்கி வசதிகள், கல்வி முதலான வற்றில் இந்தியாவின் சாதனைகள், பிரதமர் கூறியதைப்போல, குறிப்பிடத்தக்க வைதான். 

கண்டு கொள்ள மறுக்கும் சிந்தனைப் போக்கு

அதேபோன்று, நீரைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பெண்களின் கல்வி முதலானவை குறித்து விடாப்பிடியான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வதும் போற்றத்தக்கதேயாகும். திருவாளர் மோடி, இவ்வாறு நாட்டின் வளர்ச்சியை பீற்றிக் கொள்வது என்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதற் கெல்லாம் முக்கியக் காரணம் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் சுதந்திரமும், சம உரிமைகளும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் உழைப்பின் காரணமாக விளைந்தவை என்பதை மட்டும் அவர் கண்டுகொள்ள மறுக்கிறார். இத்தகு சிந்தனைப் போக்கே, ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக தங்கள் அரசாங்கத்தின் கொள் கையை விளக்குவதிலும் பிரதிபலிக்கிறது. உலகநாடுகள் அனைத்தும் குழுமியி ருக்கக்கூடிய ஒரு சொற்பொழிவுமேடையில் பிரதமர் உரையாற்றும்போது, இந்தியா வின் முன்னேற்றம் மற்றும் பன்முகத் தன்மையை உலக நாடுகளிடையே எடுத்துச் செல்லும்போது, அத்தகைய உரையானது நாட்டின் அனைத்து மக்களாலும் உத்வேகம் பெறக்கூடியவிதத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனாலும் அவரது உரையானது இங்கே அவர் பிரச்சாரக்கூட்டங்களில் ஆற்றுகிற உரைகளைப்போலவே அவர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே விரும்பக்கூடியதாகவும் மற்றவர்கள் மறுக்கத்தக்க விதத்திலும் அமைந்திருந்தது.

விழுமியங்களின் மீது  தாக்குதல் தொடுத்தல்...

நாட்டில் உள்ள உள்விவகாரங்களை உலக அளவில் பேசாது மூடிமுறைத்திட வேண்டும் என்பது, உலக அமைப்புகளின், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தின், செயல்பாடுகளுக்கு முரணா னது. ஜனரஞ்சக அரசியல், உலகளாவிய விழுமியங்களுக்கும் மாண்புகளுக்கும் மேலாக, நாட்டின் இறையாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று கோருகிறது. எனினும், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவை இன்றையதினம் உலகளாவிய பிரச்சனைக ளேயாகும். எப்படி புவி வெப்பமயமாதல், சுகாதாரம் மற்றும் பயங்கரவாதம் உலகளா வியப் பிரச்சனைகளாக மாறியிருக்கின்ற னவோ அதேபோன்றே மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவை யும் மாறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு உலகமயம் என்பது நீடித்திருப்பதோ, பாதுகாப்புடன் இருப்பதோ சிரமம்.

இந்தியா, ஆட்சி புரிவதற்கும், உள்கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கும், முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும் உலக அளவில் மிகச்சிறந்த நடை முறைகளைப் பின்பற்றிட ஒரு பக்கத்தில் முயற்சிகளை மேற்கொள்கிற அதே சமயத்தில், மறுபக்கத்தில் நாட்டு மக்களி டையே சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமைப்பண்புகளில் தாக்குதல் தொடுப்பதற்கு ஆசைப்படக் கூடாது.

அரவணைத்துப் பேசித் தீர்ப்பது

காஷ்மீர் பிரச்சனை மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய மிரட்டல் தொனியும், அணுயுத்தம் ஏற்படலாம் என்று அச்சுறுத்தியவிதமும் மிகவும் பொறுப்பற்ற தன்மையானதாகும். எனினும் காஷ்மீர் குறித்து சர்வ தேச அமைப்புகள் கேள்வி கேட்கும்போது அவற்றுக்குப் பதிலளிக்கா மல், அவற்றைக் கண்டும் காணாததுபோல் இந்தியா இருந்துவிட முடியாது.

காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்த அளவில் மிக மிகச் சிறந்த வழி - அது ஒன்று தான் ஒரே வழி - பிரச்சனைகளை உள்நாட்டி லேயே அனைத்துத்தரப்பினரையும் அரவணைத்து உள்நாட்டிற்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பதேயாகும். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” (அனைத்து இடங்களும் நம்முடையதே, அனைவரும் நம் உற்றார்களே) என்கிற தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் கவிதையை, ‘உலகத்தில் வாழும் அனை வரும் உலகக் குடிமக்களே’ என்று அழுத்த மாகக் கூறுகின்ற தொன்மையான இந்தியக் கோட்பாட்டை,  திருவாளர் மோடி மேற்கோள் காட்டியிருக்கிறார். இதனை எய்தக்கூடிய விதத்தில் முயற்சி களை மேற்கொள்ளுங்கள். இதிலிருந்து விலகிச் செல்வது என்பது சீரழிவினையே கொண்டுவரும். உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும்.

நன்றி : தி இந்து தலையங்கம், 30-9-2019 தமிழில்: ச.வீரமணி


 

;