சென்னை:
சென்னையில் தங்கம் விலை புதனன்று (ஜூலை 29) சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து ரூ. 40,512-க்கு விற்பனையாகிறது.உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் சீரற்ற நிலையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.புதன்கிழமை காலை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்தது. இதனால் சவரன் 40,512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.