ஆஸ்திரேலியாவின் ஏற்பட்டுள்ள கட்டுத்தீயின் பாதிப்பால் நகரமே சிவப்பாக மாறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக, உலகின் பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பரவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் நியூசவுத்வேல்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ பின்னர் பால்மோரல் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பரவியது. அப்பகுதியில் வறண்ட வானிலை நிலவுவதாலும், காற்று பலமாக வீசுவதாலும் தீயின் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 2500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. நீயூசவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 4 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதிக்கும் மேலாக தீயில் அழிந்துள்ளது. இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் தீயணைப்பு வீரர்கள் 900க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், போர்ட் மேக்வாரி மற்றும் பைரன் பே ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து எரிவதால், நியூ சவுத்வேல்ஸ் நகரம் முழுவதுமே சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது