அருணாச்சலப் பிரதேசத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில், தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கடந்த சில நாட்களில் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பாஜகவில் இருந்து பலர் விலகியுள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகியுள்ள 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் அனைவரும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.