செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

அரியலூர், ஜன.9- அரியலூர் மாவட்டம் திருச்சி, மீன்துறை துணை இயக்குநர் மண்டலத்தில் அரியலூர், மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டி லுள்ள, திருமானூர் மீன்வள  சார் ஆய்வாளர் அலவல கத்தில் ஒரு மீன்வள உதவி யாளர் காலிப்பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்ப ப்பட உள்ளது. விருப்பம் உள்ள 30 வய திற்குட்பட்ட (தாழ்த்தப்ப ட்டோர் மற்றும் பழங்குடியி னருக்கு 35 வயது வரை) ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். நேர்கா ணலில் கலந்துகொள்வ தற்கான தகுதிகள்- தமிழ்  எழுதப்படிக்க தெரிந்தி ருத்தல் வேண்டும். நீச்சல், வலைபின்னுதல், வலை சரி செய்தல் மற்றும் வீச்சு வலை வீசுதல் தெரிந்திருத்தல் வேண்டும். விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பங்களை பிப்ர வரி 8 அன்று மாலை 5 மணி க்குள் கிடைக்கப்பெறும் வண்ணம் மீன்துறை துணை இயக்குநர் (மண்டலம்), 17/2  சமது பள்ளி தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி 620 020 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்க ளுக்கு மேற்கண்ட முகவரி யில் நேரில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

;