tamilnadu

img

அமெரிக்கா:வால்மார்ட் நிறுவனத்தில் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி

அமெரிக்காவின் வால்மார்ட்டில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவின் நியூ ஆர்லன்ஸ் நகரில் லூசியானா பகுதியில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் அடையாளம் தெரியாத  நபர் உள்ளோ நுழைந்து திடீரென தனது துப்பாக்கியைக் கொண்டு சுடத் தொடங்கினார். இதில் வால் மார்ட் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வால் மார்ட் பாதுகாப்பு அதிகாரியால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.