tamilnadu

img

இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் திறக்க ஃபிளிப்கார்ட் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் திறக்க ஃபிளிப்கார்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் கடைகளை நடத்திவரும் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிளிப்கார்ட், இந்தியாவில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் பொருட்டு மளிகை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடையவேண்டுமானால், இந்தியர்களின் முதலீடுகள் மட்டும் போதாது என்று, மத்திய அரசு அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. காப்பீடு முதல் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை வரவேற்றுள்ளது. 

இதில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்நிய முதலீடுகள் இருந்தால் அது என்றைக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லி பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு, காப்பீட்டுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. 

இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிள்ப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதற்கு முன்வந்துள்ளது. ஃபிள்ப்கார்ட் தற்போது ஆன்லைன் மூலமாக அனைத்து விதமான பொருட்களையும் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதால் இன்னும் கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று முடிவெடுத்துள்ளது. 

சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. எனவே, வால்மார்ட் நிறுவனத்தின் அங்கமான ஃபிளிப்கார்ட், இந்தியாவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.